திருமலையில் மரண சடங்கில் கலந்து கொண்டவர்களில் 20 பேருக்கு கொரோணா தொற்று உறுதி...

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கொரோனா தொற்றினால் மரணமடைந்த பெண்ணொருவரின் மரண வீட்டைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 20 பேருக்கு கோவிட - 19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை இன்று (16) உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
திருகோணமலையை அலஸ்தோட்டம் பகுதியில் 70 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு உயிரிழந்த நிலையில் அவரது வீட்டைச் சுற்றி உப்புவெளி சுகாதார வைத்திய பிரிவினரால் இன்று காலை எழுமாற்றாக 78 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் சையொழிபவன் தெரிவித்தார்.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்தும் பிசிஆர் பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதே போல மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் தேவையற்ற விதத்தில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் தொடர்ச்சியாக முகக் கவசங்களை பாவித்து வருமாறும், கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குருப்பிடத்தக்கது.