திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் கடந்த 24 மணித்தியாலயத்தில் 7 கோவிட் மரணங்கள் பதிவு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு மரணங்களும்,81 தொற்றாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் திருகோணமலை 23 பேரும்,பதவிசிறிபுர 13 பேரும்,மூதூர் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் உப்புவெளி 09பேரும், குச்சவெளி 08 பேரும், கந்தளாய் 07பேரும், கோமரங்கடவல 03
குறிஞ்சாங்கேணி,தம்பலகாமம்,சேருவில பகுதிகளில் தலா இருவர் விதமுமாக கோவிட் -19 கொரோனா தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார சேவைகள் பிரிவுகளில் இந்த எண்ணிக்கையிலான கோவில் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது
இவர்களுள் 42 பெண்களும் 39 ஆண்களும் அடங்குவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் 81 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மூதூர் மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் தலா இருவர் விதமாகவும் குச்சவெளி, சேருவில, உப்புவெளி பிரதேசங்களில் தலா ஒருவர் வீதமாக மாவட்டத்தில் மொத்தம் 7 கொரோனா மரணங்களும் பதிவான நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொத்த மரண எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.