இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலையின் 29 பேருக்கு கொரோனா : மட்டக்களப்பு டிப்போவுக்கு பூட்டு...

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனா நோயாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பஸ் டிப்போ மூடப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எட்டு நோயாளர்கள் எழுமாறாக இனங்காணப்பட்ட நிலையில் நேற்று டிப்போவில் கடமையாற்றும் 180 பேர் அன்ரிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் .
இதன்போது 21 பேர் கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து குறித்த டிப்போவில் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களது எண்ணிக்கை 29 ஆக உயர்ந்திருப்பதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார் .
இதையடுத்து குறித்த டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .