சட்டவிரோதமாக கிண்ணியாவிற்கு கடத்த முற்ப்பட்ட தேக்கு மர குற்றிகளுடன் நபரொருவர் கைது...
(திருகோணமலை நிருபர் ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை-பாலம்போட்டாறு காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களை திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
பாலம்போட்டாறு பகுதியில் கடற்படை சரணாலய அரச தேக்கு மர தோட்டங்களில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதுடன்.
இம்மரங்கள் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகள் மூலம் கிண்ணியாவிற்கு கடத்த முற்பட்டதாக தெரியவந்ததை அடுத்தே இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு கால்நடைகள் அடங்கிய நான்கு வண்டிகளும் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலை-பாலம்போட்டாறு காட்டுப் பகுதியில் நீண்டகாலமாக மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களை திருகோணமலை வனவிலங்கு மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
பாலம்போட்டாறு பகுதியில் கடற்படை சரணாலய அரச தேக்கு மர தோட்டங்களில் இருந்து வெட்டப்பட்ட மரங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டதுடன்.
இம்மரங்கள் மாட்டு வண்டிகள் மற்றும் படகுகள் மூலம் கிண்ணியாவிற்கு கடத்த முற்பட்டதாக தெரியவந்ததை அடுத்தே இச்சுற்றி வளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு கால்நடைகள் அடங்கிய நான்கு வண்டிகளும் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
திருகோணமலை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.