உப்புவேலி பிரதேச சபையினால் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்...
(ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்திற்குற்ப்பட்ட உப்புவேலி பிரதேச சபையினால் 60 வயதுக்கு மேற்றப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்குவதத்திற்க்கான விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கோவிட் -19 கொரோனா தடுப்பூசி போடாத உப்புவேலி சுகாதாரப் பகுதியில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி வழங்கும் வேலை திட்டத்தினை திருகோணமலை உப்புவேலி பிரதேச சபை முன்னெடுத்துள்ளதாக சபையின் தவிசாளர் R.A.T.A.S.D.ரத்நாயக்க தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் உப்புவேலி பிரதேச சபைக்குற்ப்பட்ட பிரதேசத்தில் கோவிட் -19 தடுப்பூசியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு (0262222771
,0718500049,0714604502 தொடர்புகொண்டு தமது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மூடும் எனவும் தாற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு காரணமாக இந்நடவடிக்கை மேற்றக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்
மேலும் இவ் நடவடிக்கையினை திருகோணமலை உப்புவெளி பொது சுகாதார சேவை அலுவலகம் மற்றும் உப்புவேலி பிரதேச சபை இணைத்து முன்னெடுக்க படுகின்றமை குறிப்பிடத்தக்கது