Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி நடை பாதை வியாபாரம் : வியாபாரிகள் மீது வழக்கு தாக்கல் ...


(ரவ்பீக் பாயிஸ்)
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று (22) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் திருகோணமலை பதில் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எப். நஜீம் அவர்களின் தலைமையில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

எவ் சுற்றிவளைப்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி பயணிப்போர்,வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் நடைபாதை வியாபாரிகள் என பலரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது

இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதி பத்திரம் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்டவர்கள் என பலர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின்கீழ் சிலர் மீது வழக்கு தொடரப்பட்டதுடன்.

மேலும் வியாபாரிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமெனவும் இவ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மதித்து ஒத்துளைப்பு வழங்குமாறும் திருகோணமலை பதில் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எப். நஜீம் அவர்கள் வேண்டுகோள் விடுப்பதுடன்

இவ்வாறான அனுமதி பத்திரம் அற்ற நடைபாதை வியாபாரத்தினால் ஒரு சில பொதுமக்கள் கொள்வனவிற்காக வீட்டைவிட்டு வெளியே வந்ததையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவ்வாறு வெளியே வந்த பொதுமக்களுக்கு திருகோணமலை பதில் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எப். நஜீம் அவர்களினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இவ்வாறான வியாபாரங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வியாபாரிகளிடம் திருகோணமலை பதில் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எப். நஜீம் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.