திருகோணமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு : மாவட்டத்தின் கொரோனா மரணம் 200 ஐ கடந்ததாக வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவிப்பு..

(ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் கோவிட் -19 கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ஏனைய மாவட்டங்களை போன்று திருகோணமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவித்தார்.
திருகோணமலையில் அமைந்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது..
நாட்டில் ஏனைய மாவட்டங்களை போன்று திருகோணமலை மாவட்டத்திலும் கோவிட் -19 கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளதாகவும் கந்தளாய்,மூதூர்,உப்புவெளி மற்றும் திருகோணமலை நகர பிரதேசங்களில் அதிகளவிலான கொரோனா நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவித்தார்
மேலும் மாவட்டத்தில் இதுவரை கோவிட் -19 கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் இவர்களுள் அநெகமானவர்கள் கோவிட் நிமோனியா நோயினால் மரணித்ததாக எவ்வித தரவுகளும் கிடைக்கப் பெறவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அநெகமானவர்களுக்கு கோவிட் -19 கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளதாகவும் இதைத்தவிர 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் அநேககமானவர்கள் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுவருவதாகவும் இவர்களுள் மிகவும் குறுகிய அளவிலானவர்களே கோவிட் -19 கொரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்
மேலும் விரைவில் இவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா தெரிவித்தார்
கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க மாகாணத்தில் உள்ள அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளும் கொரோனா வைத்தியசாலைகளாக முன்னெடுப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா நோயாளிகளுக்காக சரியாக இயங்குவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையானது கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க இன்றுவரை கொரோனா நோயாளிகளுக்கான வைத்தியசாலையாக இயங்குவதாகவும் கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக அதிகளவிலான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள பொது வைத்தியசாலைகளை எடுத்துக்கொண்டாள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரதான வைத்தியசாலைகளாக கந்தளாய் தள வைத்தியசாலை,கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் மூதூர் தள வைத்தியசாலைகள் இயங்குவதாகவும் இவற்றுள் எந்த ஒரு வைத்தியசாலைகளிலும் இதுவரை இடப்பற்றாக்குறை ஏற்படவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.