Header Ads

Breaking News
recent

திருகோணமலை மாவட்டத்தில் பகுதி நேர மின் வெட்டு அமுல்...

(ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை மாவட்டத்தில் பகுதிநேர மின் வெட்டு அமுல்படுத்த பட்டுள்ளதாக திருகோணமலை நகர மின் பாவனையாளர் சேவை நிலையம் தெரிவித்துள்ளது

அதன்படி நாளை திங்கட்கிழமை (23) தொடக்கம் எதிர்வரும் (31) ஆம் திகதி வரை மின் வெட்டு அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதனடிப்படையில் 23 ஆம் திகதி காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை திருகோணமலை மஹமாய மாவத்தை, 4ம் கட்டை, ஹொட்பே, தீவரகம்மான, சங்கம, தானியகம, சீனக்குடா ஆகிய பிரதேசங்களிலும்

28 ஆம் திகதி காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை திருகோணமலை அபயபுரம், அநுராதபுர சந்தி பகுதி, அம்பாள் வீதி, நிர்மலகாந் திரையரங்கு, பாலையூத்து புகையிரதக்கடவை பகுதி, முகமதியாநகர், பூம்புகார் வீதி, பனந்தோட்டம்(பாலையூத்து), லிங்கநகர் ஆகிய பிரதேசங்களிலும் மின் வெட்டு அமுல் படுத்த படுவதாக திருகோணமலை நகர மின் பாவனையாளர் சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 29ஆம் திகதி காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரை திருகோணமலை உவர்மலை லோவர் வீதி பகுதி, ப்லாண்டண்ட் பொய்ண்ட்ஃ உவர்மலை ஆகிய பிரதேசங்களிலும் 30 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை திருகோணமலை மஹமாய மாவத்தை, 4ம் கட்டை, ஹொட்பே, தீவரகம்மான, சங்கம, தானியகம, சீனக்குடா ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்த பட உள்ளதாக திருகோணமலை நகர மின் பாவனையாளர் சேவை நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் ஏனைய மூதூர் மின்பாவனையாளர் சேவை நிலயத்திட்குட்பட்ட பிரதேசம் நிலாவெளி, கிண்ணியா மின்பாவனையாளர் சேவை நிலயத்திட்குட்பட்ட பிரதேசங்களிலும் இவ்வாறு மின்தடை அமுல் படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.