கொரோனா வைரஸ் தொற்றுறு 700 கர்ப்பிணி மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை...

கொரோனா வைரஸ் தொற்றுறுதியான 700 கர்ப்பிணி மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இதுவரையில், 19 கர்ப்பிணித்தாய்மார்கள் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்ததாகவும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.