திருகோணமலை சேறுவில பிரதேச வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!

(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் சேறுவில பிரதேசத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தினை சேறுவில ஐக்கிய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாளை வெள்ளிக்கிழமை 13ம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை வரை சேறுவில பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நியாங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சேறுவில ஐக்கிய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இத்தகவல் அடங்கிய துண்டு பிரசுரம் அனைத்து இடங்களிலும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளதாகவும் சேறுவில ஐக்கிய வர்த்தக மற்றும் தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
