Header Ads

Breaking News
recent

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


(அப்துல்சலாம் யாசீம்)
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா பைசல்நகர் தாமரைவில் பகுதியைச் சேர்ந்த மௌஜுத் பர்ஸான் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் குறித்து தெரியவருவதாவது நான்கு இளைஞர்கள் கடல் குளிப்பதற்காக சென்ற போது அதில் ஒருவர் நீண்ட முடியாத நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவரது சடலம் பொதுமக்கள், மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது கடற்கரையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகள் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.