Header Ads

Breaking News
recent

மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை பலி : திருமலையில் சம்பவம்...


(திருமலை ரவ்பீக் பாயிஸ்) 
திருகோணமலை - பாலையூற்று பகுதியில் மகனின் தாக்குதளுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி இன்று (08) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பாலையூற்று மயான வீதியில் வசித்துவரும் பொன்னத்துரை ராஜா (60வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

கடந்த 6ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக தன்னை பெற்றெடுத்த தந்தைக்கு பொல்லால் தலையில் தாக்கி காயம் ஏற்படுத்திய நிலையில் தந்தை திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தந்தையின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதல் தொடர்பில் மகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளத்துடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.