பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த பேச்சு..!
தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரையாடியுள்ளார்.
இந்த தகவலை பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.
அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசிய பிரதமர்,
நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரிக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஸ்ரீலங்காவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது.