Header Ads

Breaking News
recent

இன்று முதல் அமுலில் இருக்கும் புதிய சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.

  • அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதற்கு ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி.
  • அனைத்து பாலர் பாடசாலைகள் , பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்.
  • அனைத்து விருந்துகளும் திருமணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், வழிபாட்டு தலங்களில் கூட்டு நடவடிக்கைகள் அல்லது கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
  • பாதசாரி பாதைகளின் பயன்பாடு கூட்டாக இன்றி தனித்தனியாக பயன்படுத்த அனுமதி.
  • அனைத்து மசாஜ் பார்லர்கள், உடற்பயிற்சி கூடங்கள், குழந்தை பூங்காக்கள் மூடப்பட வேண்டும் .
  • உணவகங்களில் 50% வீதமானோருக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் உள்ளிருந்து உணவருந்த முடியும்.
  • பயணிகள் இருக்கைகளின் எண்ணிக்கைக்கேற்ப பயணிகள் பயணிக்க வேண்டும்.
  • அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணிக்க அனுமதி.
  • தனியார் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்தும் போது, ​​பயணிகள் இருக்கைகளின் எண்ணிக்கை அளவே கொண்டு செல்லப்பட வேண்டும். மேலும், தனியார் வாகனங்களில் பயணிக்கும் போதும் ​​ஆசனங்களின் எண்ணிக்கை அளவு மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே கொண்டு அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் இயங்க வேண்டும். மேலும், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை நடத்துவதில், சம்பந்தப்பட்ட மாகாணத்தில் வசிக்கும் ஊழியர்களை வேலைக்கு அழைக்க முன்னுரிமை எடுக்கப்பட வேண்டும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் நிறுவனத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே ஊழியர்களை அழைக்க முடியும்.
  • பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. மற்றும் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் கட்டாயமாகும்.
Powered by Blogger.