Header Ads

Breaking News
recent

அவசர வேண்டுகோள் : திருகோணமலை வைத்தியசாலை...



திருகோணமலை வைத்தியசாலையில் களம் 09 மற்றும் 10 ஆகிய கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை நிலையங்களாக மீண்டும் இயங்கி வருகின்றது. இன்றைய நிலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதிகமான நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

அனுமதிக்கப்படும் நோயாளிகள் குடும்ப ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாலும், வறிய நிலையில் இருப்பதாலும், முன் ஏற்பாடு இன்றி வருவதாலும் அவர்களுக்கான உணவு மற்றும் மாற்று உடைகள் போன்றன பெரிதும் தேவையாக உள்ளன. சுமார் 3 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான பாரியளவிலான உதவிகள் உங்களால் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

உதவும் உள்ளம் கொண்டவர்கள் வைத்தியசாலையின் களம் 9 மற்றும் 10ல் உங்களுடைய உதவிப் பொருட்களை வழங்க முடியும். மேலதிக தேவைகளுக்காக எமது அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள்.

GSO அமைப்பு - 0773640165
Powered by Blogger.