Header Ads

Breaking News
recent

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகளை மோதி தப்பிச்சென்ற கேப் வாகனம்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலை கண்டி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கர வண்டிகளை மோதி தப்பிச்சென்றதாக கேப் வாகனம் மற்றும் சாரதியை திருகோணமலை உப்புவேலி பொலிசார் தேடிவருகின்றனர்

இவ் விபத்து தொடர்பில் தெரியவருவதாவது

நேற்று (14) இரவு 9.30 மணியளவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கட்டுள்ள மூன்று முச்சக்கர வண்டிகளை அதி வேகமாக வந்த கேப் ரக வாகனம் மோதி தப்பி சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

மேலும் இச்சம்பத்தில் மூன்று முச்சக்கர வண்டிகளில் இரண்டு முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு முச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சாரதியொருவர் சிறு காயங்களளுடன் உயிர் தப்பியதாகவும் உப்புவேலி பொலிசார் தெரிவித்தனர்

மேலும் இவ்விபத்து தொடர்பில் CCTV காணொளி தரவுகளை பெறவுள்ளதாகவும் சந்தேக நபரை உப்புவேலி பொலிசார் தேடிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




Powered by Blogger.