ஊரடங்கை அமுல்படுத்த அரசு திட்டம்...

இலங்கையை முழுமையாக முடக்குமாறு அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துவரும் நிலையில் முதல் கட்டமாக இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான இரவு நேர ஊரடங்கை அமுல் செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்த உத்தியோகபூா்வ அறிவித்தல்கள் எவையும் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.
நாட்டில் தினசரி 150-க்கு மேற்பட்ட கொவி்ட் 19 மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அத்துடன், தினசரி 3,000-க்கு அதிகமாக தொற்று நோயாளர்கள் உத்தியோகபூா்வமாக உறுதிப்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் நாட்டை முடக்காவிட்டால் கொவிட் 19 மரணங்கள் விரைவில் தினசரி 250 வரை உயராலம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அழுத்தங்களைச் சமாளிக்க இரவு நேர ஊடரங்கை அமுல் செய்ய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது.