Header Ads

Breaking News
recent

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...



எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இவ்வருடத்தின், முதல் 6 மாதங்களில் இறக்குமதி செலவுகளில் 18 சதவீதமானவை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் தொகையானது வருடத்தின் இறுதி 6 மாதங்களில் 25 சதவீதம் வரையில் உயர்வடையக்கூடும் என அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்றை அத்தியாவசிய பொருட்களுக்காக ஒதுக்கங்களை மேற்கொள்வதற்காக எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்துமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.