Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,000ஐ கடந்தது....

நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்த கொவிட் பலி எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.

நேற்று பலியானோரில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




Powered by Blogger.