ஊரடங்கு காலப்பகுதியில் அமைக்கப்படவிருந்த சட்டவிரோத கட்டடம் : நகரசபையினால் முறியடிப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம் ஒன்றை அமைக்க முட்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் சந்தர்ப்பத்தினை பயன்படுத்திய திருகோணமலை மரத்தடி பிரதேசத்தில் சனீஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் இவ்வாறு திருகோணமலை நகராட்சி மன்றத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
சம்பவ இடத்தில் எவ்வித கட்டுமான பணிகளை மேற்க்கொள்வாதத்திற்கு திருகோணமலை நீதி மன்றத்தினால் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஊரடங்கு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இவ்வாறு கட்டட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பொது மக்களினால் சம்பவ தினமான நேற்று (04) திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு அவர்களுக்கு தெரியப்படுத்தியதனை அடுத்து உடன் காலத்திற்கு விஜயம் செய்து இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்படவிருந்த கட்டடத்தில் வேலைகளை உடன் நிறுத்துமாறு கட்டளையிட்டிருந்தார்.
மேலும் திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு அவர்களின் வேண்டுகோளுக்கினங்க குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் உரிய சட்ட விரோத கட்டடம் அமைப்பதிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

