திருகோணமலையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் உட்பட 11 பேர் கைது...

(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை - உப்புவெளி அலஸ்தோட்டம் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி அனுமதிப்பத்திரமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி பொலிசாரினால் இன்று (02) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஊரடங்கு சட்டத்தை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் விற்றபனை செய்ததாகவும் மற்றும் குறைந்த பட்ச வாடிக்கையாளர்களுக்கும் அதிகமானவர்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டத்தை மீறியமை,சுகாதாதார நடைமுறையினை பின்பற்றாமை போன்ற குற்றங்களின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாகவும் உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மதித்து இவ் கொரோனா ஒழிப்பு செயட்பட்டிட்ற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு திருகோணமலை உப்புவெளி பொலிசார் வேண்டுகோள் விடுகின்றனர்.
