Header Ads

Breaking News
recent

ஊடகவியலாளர் பிரகாஷ் கொவிட் தொற்றால் மரணம்...



மாற்றுத்திறனாளியான ஊடகவியலாளன் பிரகாஷ் ஞானப்பிரகாசம் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சிறுவயதுமுதல் தசை சிதைவு நோயால் பீடிக்கப்பட்டு( muscular dystrophy ) சக்கர நாற்காலியில் வாழ்ந்தாலும் தான் மாற்று திறனாளி என தன்னை எங்குமே காட்டிக்கொள்ளாது மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் பங்கெடுப்பதும் அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை செய்வதும் சுயாதீன பத்திரிகையாளராக சில ஊடகங்களில் பணியாற்றிய ஒரு மன தைரியம் மிக்க ஊடக போராளியாவார் பிரகாஷ்.

இவரின் Twitter, Facebook இல் வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மையால் பல முக்கிகமான பிரபலங்களால் Twitter தளத்தில் பின் தொடரப்பட்டுள்ள அளவுக்கு சமூகவலை தளங்களை சிறந்த முறையில் பயன்படுத்திய ஒரு பிரஜைகள் ஊடகவியலாளன் (Citizen journalist).

இவற்றுக்கெல்லாம் மேலாக தன் வாழ்க்கை வரலாறு பற்றி "பிரகாஸ் என்னும் நான்" என்னும் சுய சரிதை நூலையும் எழுதிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றையதினம் டுவிட்டரிலும் பேஸ்புக்கிலும் தான் COVID-19 நோய் தொற்றால் பீடிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டிருந்தார் . இன்று பிரகாஷ் உயிரைிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள் .
Powered by Blogger.