11 வது (கொமரண்ட் ஸ்ட்ரைக் எக்ஸ் எல்) இலங்கை முப்படை மற்றும் வெளிநாட்டு கூட்டு களப் பயிற்சி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் நடைபெற்றது...
திருகோணமலை கும்புறுபிட்டி பிரதேசத்தில் இலங்கை முப்படையின் 11 வது (கொமரண்ட் ஸ்ட்ரைக் எக்ஸ் எல்) இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட்டு களப் பயிற்சி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது..
இவ் நிகழ்வில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இவ் கூட்டு பயிற்சி தொடர்பில் விளக்கமளித்த இராணுவ தளபதி சவேந்திர சில்வா
இக்கூட்டு பயிற்ச்சியானது இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட்டு களப் பயிற்சி ஆகும், மேலும் இது சிறப்பு இயக்கப் படைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் . இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினரின் பங்கேற்புடன் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்
இந்த பயிற்சியின் நோக்கம் திறமையான இராணுவ வீரர்களை உருவாக்குவது மற்றும் வேலைவாய்ப்புக்கான ஒரு கருத்தியல் கட்டமைப்புக்காக வடிவமைக்கபட்டதாக தெரிவித்த இராணுவ தளபதி
இப்பயிற்ச்சி செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடம்பெற்றதாகவும் இவ் கூட்டு பயிற்சியில் இலங்கை முப்படையினரின் 444 உயர் அதிகாரிகள் உள்ளகங்களாக 3019 இலங்கை முப்படை வீரகளையும் அடங்கியதாக அமைந்திருந்தது
மேலும் இந்தியா,பங்களாதேஷ்,மாலைதீவு மற்றும் ஓமான் போன்ற ஐந்து வெளி நாடுகளை சேர்ந்த 08 உயர் அதிகாரிகள் அடங்களாக 29 வெளிநாட்டு இராணுவ வீரர்களளும் இவ் கூட்டு பயிற்ச்சியில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இக்கூட்டு பயிற்ச்சியில் இராணுவத்தினர்,கடற்படையினர்,விமான படையினர் மற்றும் விசேட அதிரடி படையினரின் இவ் பயிற்ச்சியினை பார்க்கும் போது நாட்டில் யுத்தம் இல்லை என்றாலும் எந்நேரமும் இலங்கை முப்படை தயார் நிலையில் இருக்க இது சிறந்த பயிட்சியாக இருக்கும் எனவும் வெளிநாட்டு விசேட அதிரடி படையினரின் யுக்திகளையும் இதன்போது தெரிந்துகொள்ள கூடியதாகவும் இருக்கும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்
மேலும் இந்நிகழ்வு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடை பெற்றதுடன் முப்படையின் உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.