Header Ads

Breaking News
recent

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1ஆம் திகதியுடன் நீக்க தீர்மானம் : திருகோணமலையில் இராணுவ தளபதி தெரிவிப்பு...

அட்மின்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதியுடன் நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (29) திருகோணமலை கும்புறுபிட்டியில் இடம்பெற்ற இலங்கை ஆயுதப் படைகளின் முதன்மையான கூட்டு களப் பயிற்சி (கொமரண்ட் ஸ்ட்ரைக்) யின் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்

மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4மணியுடன் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாட்டினை முழுமையாக திறக்க தீர்மானிக்க பட்டுள்ளதாகவும்

இன்று இரவு அல்லது நாளை அனைத்து நிறுவனங்களுக்குமான புதிய சுகாதார சுற்று நிருபத்திட்க்கு அமைய திறக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.