மனித நுகர்வுக்கு உதவாத 27,000 கிலோ புளி மூட்டைகள் பறிமுதல்...

அனுராதபுரத்தில் உள்ள மரதன்கடவல பகுதியில் மனித நுகர்வுக்கு உதவாத சுமார் 27,000 கிலோ புளி மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கெக்கிராவ இராணுவ முகாமின் உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இரண்டு களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பொது சுகாதார ஆய்வாளர்கள் குறித்த களஞ்சியசாலைகளுக்கு முத்திரை வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் நால்வர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.