Header Ads

Breaking News
recent

பாவனைக்குதவாத 8,155 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது...



பாவனைக்கு உதவாத 8,155 கிலோகிராம் கழிவுத் தேயிலையை பாரவூர்தி ஒன்றில் கொண்டுச் சென்ற இருவர் பெலும்மஹர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோனஹேன காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று(18) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், அனுமதிப் பத்திரமின்றி அந்தக் கழிவுத் தேயிலையை கொண்டுச் சென்றுள்ளனர்.

கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 48 வயதுடைய இருவரே இதன்போது கைதுசெய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.