சீனி ரூபா 85 க்கு வெளியிட்ட வர்த்தமானி எங்கே : சீனி கொள்ளையர்களிடம் இருந்து அரச உடைமையாக்கிய சீனியினை கொள்வனவு செய்த அரசாங்கம் : அருண் ஹேமச்சந்திர குற்றச்சாற்று..

சீனி பதுக்கல்காரர்களிடமிருந்து அரசுடமையாக்கப்பட்ட சீனி சீனி கொள்ளையர்களிடமிருந்து அரசாங்கம் 120 ரூபாய்க்கு கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதாக கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஊடக பேச்சாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான அருண் ஹேமச்சந்திரா குற்றம் சுமத்தியுள்ளார்
திருகோணமலையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்ட சீனியினை அரசாங்கம் பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த காலங்களில் அறிவித்துள்ள நிலையில் நாட்டில் சீனி,அரிசி மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மென்மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதாகழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஊடக பேச்சாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்
மேலும் கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் ஒரு கிலோ கிராம் சீனியினை 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை அதிகபட்ச சில்லறை விலையாக அறிவித்து புதியதொரு வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும் முன்னர் வெளியிட்ட வர்த்தமானி எங்கே எனவும் அருண் ஹேமச்சந்திரா கேள்வி எழுப்பினார்
இவ்வாறு 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனை செய்வதாக அறிவித்த சீனி கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு அரசஉடைமையாக்கப்பட்ட சீனியினை அரசாங்கம் 120 ரூபாய்க்கு கொள்வனவு செய்து சீனி கொள்ளையர்களை பாதுகாத்து சீனியினை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட சீனியினை முன்னர் வெளியிட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டவாறு ஒரு கிலோகிராம் சீனியினை 85 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாத அரசாங்கம் இதுவென தெரிவித்த அருண் ஹேமச்சந்திர
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ் அசாதாரண சூழ் நிலையில் மக்களின் அன்றாட வாழ்க்கை செலவில் விளையாடுவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டுமெனவும் கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் ஊடக பேச்சாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான அருண் ஹேமச்சந்திர சுற்றிக்காட்டினார்