Header Ads

Breaking News
recent

எரிபொருளுக்காக இந்தியாவிடம் கடன் பெற இலங்கை கவனம்...



எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெற அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் கொள்முதலில் நெருக்கடி உள்ளது. இதற்காக எரிசக்தி அமைச்சகம் முன்பு பல நாடுகளுடன் கலந்துரையாடல் நடத்தியிருந்தது.

எனினும், இந்தியாவில் இருந்து குறித்த கடன் தொகையை பெறுவதற்கான நிபந்தனைகள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்று அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.