மட்கோ முகம்மதியா நகர் வீதியை மழைக்காலம் வருவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை-மட்கோ முகம்மதியா நகர் வீதியை மழைக்காலம் வருவதற்கு முன்னர் புனரமைத்து தருமாறு அப்பகுதியிலுள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட திருகோணமலை நகரை அண்மித்த இந்தக் கிராம மக்கள் கடந்த 25 வருடங்களாக அரசியல்வாதிகளினாலும், அரச அதிகாரிகளினாலும் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி புணரமைக்கப்படாமையினால் அவசரமாக கற்பிணிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிராமப்புறங்களில் அரசினால் பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றநிலையில் திருகோணமலை நகரை அண்மித்த பகுதியில் இவ்வாறான வீதி புனரமைக்க படாமை குறித்து மக்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
பல அரசியல்வாதிகளிடம் இந்த வீதியை புனரமைத்து தருமாறு தெரியப்படுத்தியும் இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அந்த வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பல தடவைகள் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தெரிவித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே மட்கோ முஹம்மதியா நகர் வீதியை புனரமைத்துதருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
