திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு...
கோவிட்-19 தொற்றுநோய் மூன்றாம் அலையின் பரவல் காரணமாக மிகக் கூடிய அவதானத்துடன் கடமையில் ஈடுபடும் சுகாதார பணிக்குழுவின் அங்கத்தவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிராக இன்று (27) திருகோணமலை பொது வைத்தியசாலை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 12 மணி வரை கடமையிலிருந்து வெளியேறியதுடன் இன்றைய தினம் பகல் 12 மணிக்கு பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதிப் ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்ப்பாடு செய்திருந்தனர்
இவ் ஆர்ப்பாட்டத்தில் சுகாதார ஊழியர்களை சுயமாக இயங்க விடு,கோவிட் 19 இடர் கொடுப்பனவு ரூபா 7500 ஐ மீள வழங்கு,சகல சுகாதார பிரச்சினைகளையும் தீர்த்து வை என பதாதைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருத்தனர்.