திருகோணமலை திரியாய் பிரதேசத்தில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம்...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)நாட்டில் மனிதன் யானை மோதல் அதிகரித்து வரும் நிலையில் திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட திரியாய் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்
திரியாய் பிரதேசத்தில் காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க யானை மின் வேலிகள் அமைக்கப்பட்ட போதிலும் அவைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையினால் காட்டு யானைகள் குடியிருப்புகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு இரவு வேளைகளில் மாத்திரமல்லாது மாலை நேரத்தில் கூட காட்டு யானைகள் கூட்டமாக வருவதனால் ஒரு அவசர வேலைக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் விவசாய பயிர்கள் மற்றும் தென்னம் பிள்ளைகள் போன்றவற்றை முற்றாக அழித்து நாசம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
இது தொடர்பாக உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுத்த போதிலும் யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் யானை பட்டாசு போடுவதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உரிய அதிகாரிகள் அனுப்ப படுவதாகவும் அவ்வாறு அனுப்பப்படும் யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து சேதமைந்ததன் பின்னர் அதிகாரிகள் வருகைதருவதாகவும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்
எனவே எமது ஜீவனோபாயமான விவசாயத்தினையும் எமது உடைமைகளையும் பாதுகாப்பதத்தற்கு அரசாங்கத்தினால் அமைத்துத்தரப்பட்ட யானை மின்வேலியிணை உரிய முறையில் உரிய அதிகாரிகள் பராமரித்து காட்டு யானைகளை மக்கள் குடியிருக்கும் பிரதேசத்திற்குள் பிரவேசிக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்




