Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் கொட்டும் மழையில் ஊரடங்கு சட்டத்தை மீறி மது கொள்வனவில் மதுப்பிரியர்கள்...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருகோணமலையில் அனைத்து மதுபானசாலைகளும் திறந்து வியாபாரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நாட்டில் அனைத்து மதுபானசாலைகளையும் நேற்று (17) முதல் திறப்பதற்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியினை அடுத்து இவ்வாறு மதுபான சாலைகள் திறந்து மதுபானங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, வைன் ஸ்டோர்ஸ் மற்றும் பியர் விற்னை நிலையங்கள் திறக்கப்பட்டதாகவும் இதன்போது, திருகோணமலை நகரில் திறக்கப்பட்ட மதுபானசாலைகளில் மதுப்பிரியர்கள் கொட்டும் அடைமழையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபான போத்தல்களை கொள்வனவு செய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு திறக்கப்பட்ட மதுபானசாலைகள் சுகாதர நடைமுறையினை மீறி திறக்கப்பட்டதாகவும் மதுபிரியர்கள் சுகாதார நடைமுறையினை மீறி கூட்டமாக கொள்வனவில் ஈடு பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையினிமிர்த்தம் மக்கள் வெளியில் செல்வது சவாலாக இருக்கும் நிலையில் இவ்வாறு மதுபாணசாலைகளை திறந்து இவ்வாறு ஒன்று கூடி கொள்வனவு செய்வது நாட்டை இன்னும் பாரதூரமான நிலைமைக்கு கொண்டுசெல்லும் எனவும் அரசாங்கம் இது தொடர்பாக ஒரு திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமெனவும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.




Powered by Blogger.