Header Ads

Breaking News
recent

பாடசாலைகளை திறப்பதற்கான எவ்வித திட்டங்களும் இந்த அரசாங்கத்திடம் இல்லை : பிள்ளைகளின் எதிர்காலம் அச்சத்தில் - திருகோணமலை மாவட்ட பெற்றோர் ஒன்றியம் குற்றச்சாட்டு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் - 19 கொரோனா சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாடசாலைகள் மூடப்பட்டு அதனை மீள திறப்பதற்கான எவ்வித திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என திருகோணமலை மாவட்ட பெற்றோர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது

திருகோணமலையில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்

நாட்டை பொறுத்தவரை சிந்தித்து செயற்பட வேண்டிய சூழ்நிலையில் தற்போது பெற்றோர்கள் இருப்பதாகவும் நாட்டின் முக்கிய அத்தியாவசிய சேவைகளான கல்வி,அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் என்பன அடிமட்டத்தை அடைந்திருப்பதாகவும் திருகோணமலை பெற்றோர் ஒன்றியத்தின் உறுப்பினர் என்.விதானகே லோகு களபதி தெரிவித்தார

மேலும் நாடு கல்வி,அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் என்ற மூன்றில் முன்னோக்கி செல்லபடுமா அல்லது வேறொரு நாட்டுக்கு தாரைவார்க்க படுமோ என்ற ஐயம் எழுந்துள்ளதாகவும் சுகாதாரம் அபிவிருத்தி என்பன எம்மால் பேச முடியாத விடயம் என்றாலும் கல்வி விடயத்தைப் பொறுத்தவரையில் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கண்டிப்பாக பேச வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் இன்றைய தினம் இவ்வாறு ஒன்றுசேர்ந் இருப்பதாக தெரிவித்தன

பாடசாலைகள் மூடப்பட்ட காலம்முதல் ஆசிரியர்,மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகளோ அல்லது பாடசாலைகளை தொற்று நீக்கும் செயற்றப்பாடுகளை கூட இதுவரை முன்னெடுத்து செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்

கடந்த காலங்களில் பாடசாலை ஆரம்பிக்கப்படாத பட்சத்திலும் ஆசிரியர்கள் இணையவழி மூலம் கற்பித்தலை தொடர்ச்சியாக வழங்கிய வண்ணம் இருந்தார்கள் அவ்வாறான செயல்பாடுகளில் முழுமையாக அர்ப்பணித்து செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தாங்கள் தலைவணங்குவதாக தெரிவித்த திருகோணமலை பெற்றோர் ஒன்றியம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக அவ்வாறு இடம் பெற்ற இணைய வழிக் கற்பித்தலை கூட முன்னெடுத்து செல்ல முடியாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சரியான கொடுப்பனவுகள் கொடுக்கப்படாமையினால் இணைய வழி கற்பித்தலை கூட இடைநிறுத்திஉள்ளதகவும் தெரிவித்தனர்

இவ்வாறு காலம் கடந்து சென்று கொண்டிருக்கும்போது அரசியல்வாதிகளுக்கு இதுபற்றி சிறிதளவேனும் சிந்தனை இல்லாத போதிலும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் இணைய வழி கற்பித்தலையாவது தொடர்வதற்கு ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினையை தீர்த்து வைத்தது எமது பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்து தருமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக திருகோணமலை மாவட்ட பெற்றோர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

மேலும் எமது பிள்ளைகளுக்கான உடை,உணவு,தங்குமிட வசதி ஏனைய தேவைகளை பெற்றோராகிய தங்களால் பூர்த்தி செய்ய முடியும் என்றாலும் கற்றல் மற்றும் கற்பித்தல் விடயத்தில் ஒரு ஆசிரியரால் மாத்திரமே முறையாக முன்னெடுத்து செல்ல முடியும் என்பதுடன் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியரின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்து பாடசாலைகளை மீள திறப்பதற்கு பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்து நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துடன்

இவ் ஊடக சந்திப்பில் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்துவை மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய் என்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் திருகோணமலை பெற்றோர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.