Header Ads

Breaking News
recent

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - உதயகுமார் M.P



நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதோடு மேலும் பல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு சுகாதார கருவிகளை இன்று வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் மக்களை மேலும் சிக்கலுக்குள் தள்ளும் வகையில் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.