Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு : மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள...


கோவிட் 19 கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமது வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் ஆண்டான்குளம் கிராம சேவையாளர் பிரிவில் வாழ்வாதாரத்தை இழந்த வறிய நான்கு குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது

அதனடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவசியமான உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில்

குறித்த குடும்பலுங்கு உலர் உணவு பொருட்கள் இன்று (14) மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் விசேட தேவையுடைய ஒருவரும் பொருளாதார ரீதியாக மிக வறுமைக்குட்பட்ட மூன்று குடும்பங்களும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் இவ்வாறான விசேட தேவையுடையவர்கள், மிக வறிய குடும்பங்கள் உடையவர்களின் தேவையறிந்து அவசியமான உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.