திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கண்டி வீதி ஆண்டான்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
திருகோணமலை கணேஸ்லேன் உள் வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதுண்டத்தில் இவ் விபத்து ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் பயணித்த மனைவி மற்றும் பிள்ளை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
டிப்பர் வாகனம் உள் வீதியிலிருந்து அதி வேகமாக பிரதான பாதையை அடைய முற்ப்பட்டதினால் இவ்விபத்து ஏற்றப்பட்டிருப்பதாக உப்புவேலி பொலிசார் தெரிவித்தனர்
மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணையினை உப்புவேளி பொலிசார் மேற்றக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.