கடலட்டை பிடிப்பதற்காக கடலுக்குச்சென்ற நபர் ஒரு வாரமாக வீடு திரும்பவில்லை...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது.
திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடல் பிரதேசத்தில் கடல் அட்டை பபிடிப்பதற்க்காக தொழிலுக்கு சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸுஜூத் கான் பாசாத் (வயது 30) கடந்த 6ஆம் திகதி திருகோணமலையிலிருந்து தொழிலுக்காக யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்றதாகவும் அதே வாரம் தொடர்ச்சியாக தொழிலுக்கு சென்று வந்ததாகவும் கடந்த 10ஆம் திகதி இரவு 9 மணி வரை தனது மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் பின்னர் இன்றுவரை எவ்வித தொடர்பும் இல்லையென பாசத்தின் மனைவி தெரிவித்தார.
மேலும் காணாமல் போன பாசாத்துடன் கடல் அட்டை பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றமவ்ஜுன் என்பவரை நேரில் சென்று இது தொடர்பாக வினவியபோது கடந்த சனிக்கிழமை காலை இருவரும் ஒன்றாக கடலுக்கு சென்றதாகவும் பின்னர் கடலட்டை பிடிப்பதற்காக பாஸாத் கடலுக்குள் இறங்கி சுழியோடிக்கொண்டிருந்ததாகவும் சுமார் அரை மணி நேரம் ஆகியும் அவர் மேலே வராமையினால் தனது முதலாளியிடம் இதுசம்பந்தமாக தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்
பின்னர் பல படகுகளில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவரை கண்டுபிடிக்காமல் போனமையினால் அன்றைய தினமே கரை திரும்பியதாகவும் அவருடன் கடலுக்குச் சென்ற நபர் கருத்துத் தெரிவித்தார்
மேலும் இரு பிள்ளைகளின் தந்தையான பாஸித்த்தினை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் இது தொடர்பாக குச்சவெளி பொலிஸ் நிலையம் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாசத்தின் உறவினர்கள் தெரிவித்தனர
இலங்கை கடற்படையின் உதவி கிடைத்தால் இவரை தேடும் பணி தீவிரமடையும் எனவும் இதுதொடர்பாக அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்க வேண்டும் எனவும் இவரை தேடுவதற்காக உதவுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.