கண்டி இந்து சிரேஸ்ட கல்லூரியின் அபிவிருத்திக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!!!
வரலாற்று சிறப்புமிக்க இந்த பாடசாலை எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டது. கடந்த காலங்களில் இப்பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக மாணவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. அண்மையில் கள ஆய்வு ஒன்றை மேற்கொள்ள பாடசாலை அதிபரின் அழைப்பின் பெயரில் பரத் அருள்சாமி இப்பாடசாலைக்கு சென்றிருந்தார் முழுமைப் படுத்தப்படாத கட்டுமான பணிகளின் காரணமாக மாணவர்களின் கல்வி கற்கும் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதை அதிபர் எடுத்துரைத்தார். இதற்கு தீர்வு வழங்கும் முகமாக மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு பரத் அருள்சாமி இதனை கொண்டு சென்றிருந்த வேலை. கண்டிக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் நேரடியாக பாடசாலைக்கு சென்று அங்குள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி முதல் கட்டமாக பத்து மில்லியன் ரூபாவையும் இப்பாடசாலையின் முழுமையான கட்டுமானத்திற்கான தேவையான வசதிகளை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில் முழுமைப் படுத்தப்படாத கட்டுமான பணிகளை நிறைவு செய்து மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடையூறின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்குள் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு நாம் கல்விக்கான முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் கண்டி நகரின் அடையாளமாக உள்ள இந்து சிரேஷ்ட பாடசாலை முழுமையாக அபிவிருத்தி பெற்று மாணவர்களுக்கும் கண்டி தமிழ் மக்களுக்கும் ஒரு அடையாளமாக திகழ நாம் முன் நிற்போம என்று பரத் அருள்சாமி கூறியுள்ளார்.