Header Ads

Breaking News
recent

திருமலையின் சாதனை வீரன் இடம்பிடித்தார் உலகசாதனைப் புத்தகத்தில்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை கரேத்தே துறையில் தொடர் சாதனை படைத்து வந்த திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட விபுலானந்தன் கௌரிதாசன் அவர்கள் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்து திருகோணமலைக்கும் பெருமை சேர்த்தார்.

விடா முயற்சியாளனும், பிரபல கராத்தே ஆசானும், ஓகா ஆசானும், உலகளாவிய கராத்தே ஆசான் தரத்தை எட்டியவருமாகிய, கெளரிதாசன் அவர்கள் உலகளாவிய ஓட்டப்பந்தையத்தில் சாதனையாளராகப் பதியப்பட்டார்.

வாழ்நாளில் கின்னஸ் உலக சாதனை, 50 வயதுக்கு முன்னர் செய்து விட வேண்டும் என்ற கனவு நனவாகியதாக நெகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் குறிப்பிட்டார். மேலும் இந்தச் சாதனை தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

சாதனையாளர்கள் பெயர்கள் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவது சாதனையுலகின் மிகப் பெரிய அங்கீகாரம். எனது பெயரும் அந்தப் புத்தகத்தில் பதியப்பட்டு விட்டது என்பதனை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

எனது இந்த முயற்சியை நான் பிறந்து வளர்ந்த எனது மண், எங்கள் தலைநகரம் திருகோணமலைக்கு அர்ப்பணிக்கிறேன் என்றும் மிக விரைவில் மேலும் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்த உள்ளதாகவும் கூறினார்.

குறித்த இந்தச் சாதனயானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து ஏறத்தாழ 150,000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், ஏறத்தாழ 115,000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 3,570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35,570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609 வது இடம் பிடித்துள்ளார்.

இப்பெருமையையும் சாதனையினையும் என்னை ஈன்ற என் தாய்மண்ணை முத்தமிட்டு அர்ப்பணிக்கின்றேன் என தாய்மண்ணைப் பெருமைப்படுத்தியுள்ளார் சாதனை வீரர் விபுலானந்தன் கௌரிதாசன்.





Powered by Blogger.