Header Ads

Breaking News
recent

இந்திய மீனவர்களின் த்துமீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் ...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டனப் போராட்டம் முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறை நோக்கி ஆரம்பமானது

இன்று (17) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ள மீனவர்களின் போராட்டமானது படகுகளில் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது.

இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரி இன்று 17.10.2021 முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது .

கடல் வளத்தினையும் நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுபை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.