கிழக்கு மாகாண பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா சம்பத் தெரிவிப்பு...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
கிழக்கு மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்க பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்
இன்று (13) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது
கிழக்கு மாகாணத்தில் அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிப்பதற்கான சுகாதார நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் என்பன தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் தேதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கிழக்கு மாகாண ஆளுநர்இவ்வாறு பதிலளித்தார்
இதுவரை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் எவ்வித வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அதற்கான சாதகத்தன்மை தொடர்பில் உரிய சுகாதார தரப்பினர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்
மேலும் பாடசாலைகளில் மாணவர்களுக்கான நீர் வசதி,கை கழுவுதல் போன்ற அனைத்து சுகாதார தேவைகளுக்குமான வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளதாகவும் இது தொடர்பாக பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.