Header Ads

Breaking News
recent

நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு : அரசங்கத்திட்க்கு வாக்களித்தது இவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்பார்த்து அல்ல - தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
நாட்டில் நாளுக்கு நாள் விலை அதிகரிப்பு செய்யப்படுவதனால் குடும்ப பெண்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவி ஏ,ஜீ,சித்ராணி தெரிவித்தார்

இன்று (13) ஏட்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

நாளுக்கு நாள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்படுவது வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மீனவ மற்றும் விவசாய குடும்ப பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்

அடிக்கடி சம்பள உயர்வு பெரும் அரச உத்தியோகத்தர்களுக்கு விலை அதிகரிப்பு சாதகமாக இருந்தாலும் மீனவ,விவசாய குடும்பங்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் கிடைப்பதில்லை மீன்களுக்கான விலையோ விவசாயின் விளைச்சலுக்கான விலையோ அதிகரிக்கவில்லை எனவும் மீனவ விவசாய குடும்பங்கள் இரண்டும் கட்ட நிலையிலேயே இருக்கின்றார்கள் என கவலை தெரிவித்தார்

மேலும் தங்கள் இந்த அரசங்கத்திட்க்கு வாக்களித்தது இவ்வாறான ஒரு சூழ்நிலை ஈடுபடுமென நினைத்துக்கூட பார்க்கவில்லை என தெரிவித்த தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவி திருகோணமலையில் பெரும்பாலான பெண்கள் யுத்தத்தினால் பாதிக்கபட்டவர்களாகவும் தமது வாழ்வாதாரத்தினை விவசாயமாக கொண்டுள்ள நிலையில் கொரோனா காரணமாக மேலும் வாழ்வாதாரத்தை இழந்த இப் பெண்கள் இவ் விலை அதிகரிப்பு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பானது குடும்ப பெண்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏட்படுத்தியுள்ளதாகவும் இந்த அரசாங்கம் முதலில் சமையல் எரிவாயுவின் கொள்ளளவில் மக்களை ஏமாற்றியது தற்போது விலையினை அதிகரித்து நாடகமாடுவதாகவும் ரூபா 10 க்கு விற்பனை செய்யப்பட்ட அப்பத்தை கூட ரூபா20 க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

உங்ககுக்கு வாக்களித்த மக்களை விலை வாசியினால் சாகடிப்பதை விட்டு விட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையாவது நியாயமான விலைக்கு வழங்குமாறு இந்த அரசாங்கத்திட்கு வாக்களித்த மக்கள் சார்பாக வேண்டிக்கொள்வதாக கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ் ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திருகோணமலை மாவட்டத்தின் தலைவர் எம்.எம்.றஹீம் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட பெண்கள் பிரிவு தலைவி ஏ,ஜீ,சித்ராணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.