Header Ads

Breaking News
recent

BREAKING_NEWS : எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்...



நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும், மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கொவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 200க்கும் குறைந்த மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகள் இன்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.