Header Ads

Breaking News
recent

நாளை முதல் பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி : சுகாதார அமைச்சு




பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்காக ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது 
அதன்படி நாளை (22) வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது 

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கோவிட் - 19 அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஒன்று கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிவாசல்களிலும் ஒன்று கூடுவது தடைசெய்யப்பட்டிருந்தது 

மீண்டும் நாடு வழமைக்கு திரும்பியுள்ள இவ் சூழ்நிலையில் நாளை முதல் புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீண்டும் ஜும்ஆ தொழுகை நடத்துவதற்கான புதிய சுகாதார வழிகாட்டல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது 

அதனடிப்படையில் ஜும்ஆ தொழுகைக்காக மாத்திரம் பள்ளிவாசல்களில் 50 பேர் தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதுடன் பள்ளிவாசளின் வெளிப்புறத்திலோ அல்லது எந்த இடத்திலும் ஒன்று கூடுவது முற்றாக தடைசெய்ய பட்டுள்ளதாகவும் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி என சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் தொழுகைக்காக வரிசையில் நிட்பதற்காக இடையில் ஒரு வரிசை (ஷாஃப்) இடைவெளி விடப்படல் வேண்டுமெனவும் (இமாம்) உட்பட அனைத்து நபர்களும் சுத்தமான முகக்கவசத்தை மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக மூட படல் வேண்டும்எனவும் முறையற்ற முகக்கவசம் அணிவதை அனுமதிக்கக்கூடாது எனவும் நுழைவாயிலில் கை கழுவுவதட்காக சவர்க்காரம் மற்றும் நீர் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் பள்ளிவாயலுக்கு வரும் அனைவரும் கைகுலுக்கல், கட்டிப்பிடித்தல் அல்லது வேறு எந்த விதமான உடல் சம்பந்தமாக வாழ்த்து/தொடர்புகளையும் மேற்றுக்கொள்வது தவிர்க்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டலில் வெளியிடப்பட்டுள்ளது 

முடியுமானவரை வீட்டிலிருந்தே முகம் கழுவுவது (வுழூ) செய்து வருவது சிறந்ததென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் காய்ச்சல், இருமல், தடிமல் , தொண்டை புண், மூச்சுத் திணறல் போன்ற கோவிட் -19 கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தால் கூட பள்ளிவாயல்களுக்கு வருவதினை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு அறிகுறிகள் காணப்படும் எந்தவொரு நரையும் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேற்கண்ட சுகாதார விதிமுறைகளை எல்லா பள்ளிவாசல்களிலும் கண்காணிக்கக்குமாறும் வெள்ளிக்கிழமை ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கான இந்த அனுமதி முஸ்லீம் சமூகத்திற்க்கான ஆன்மீக நன்மைகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுவதாகவும், இவ் சுகாதார நடைமுறையினை அலட்சியம் செய்யும் பட்சத்தில் நாட்டில் உருவாகும் COVID-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.