திருகோணமலை யுனைடெட் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி...
பாரதி விளையாட்டு கழக அணிக்கு எதிரான போட்டியில் யுனைடெட் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது
இப்போட்டி நேற்று (17) பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது
நாணயசுழட்சியில் வெற்றிபெற்ற பாரதி விளையாட்டு கழக அணி முதலில் துடுப்பாட தீர்மானித்து டிலான் 32 பந்துகளில் 35 ஓட்டம்களை பெற்றதுடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் நேசன் 27 பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்று 34 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த பாரதி விளையாட்டு கழக அணி 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாட்டத்தில் களமிறங்கிய யுனைடெட் கிங்ஸ் அணி 23 ஓவர்களில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தனர். பாயாஸ் அமான் 6 விக்கட்டுகளை கைப்பற்றி 27 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்று போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யட்டதுடன் மொஹமட் இஸாம் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றியிருந்தார் அஸ்பாக் அபூ ஆட்டமிழக்காமல் 28 பந்துகளுக்கு 35 ஓட்டுக்களை பெற்று 5 விக்கட்டுகளால் பாரதி விளையாட்டு கழக அணியை வெற்றி கொண்டது திருகோணமலை யுனைடெட் கிங்ஸ் அணி.