Header Ads

Breaking News
recent

இன்று இதுவரை 556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...



கொரோனா தொற்று உறுதியான மேலும் 141 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 415 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 556 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 539,416 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 13, 545 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 302 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 512,165 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.