Header Ads

Breaking News
recent

சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது ...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
சட்டவிரோதமான முறையில் நியுசிலாந்து செல்ல முற்பட்ட 63 பேர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்த அறுபத்தி மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் இவர்கள் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பெண்ணொருவர் உட்பட இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகவ தெரியவருகின்றது.

கடந்த 15 நாட்களாக குறித்த நபர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வருகை தந்து குறித்த தனியார் விடுதியில் தங்கி இருந்ததாக அரச புலனாய்வுத் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் செய்து வருவதாகவும்,விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.






Powered by Blogger.