Header Ads

Breaking News
recent

நிலாவெளி புறா தீவு தேசிய பூங்கா கடற்கரை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் பொதுமக்களினால் முன்னெடுப்பு...

(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை நிலாவெளி புறாத்தீவு தேசிய பூங்கா மற்றும் அதனை அண்டியுள்ள கடற்கரைப் பிரதேசங்களை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது

இவ் வேலைத்திட்டத்தினை புறாத்தீவு தேசிய பூங்காவின் அறங்காவலர் உபாலி குமாரதுங்க அவர்களின் தலைமையில் நேற்று (11) ஆரம்பமானது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதனால் இப்பகுதி கடல் மற்றும் கடலோர நிலப்பரப்புகள் குப்பைக் கூளங்கள் நிறைந்து காணப்பட்டதை அடுத்து இவ் வேலைத்திட்ட முன்னெடுக்கப்பட்டது

இவ் சுத்தப்படுத்தும் திட்டத்தினால் கடல் வளம்,கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கண்டல் தாவரங்கள் என்பன பாதுகாக்க படுவதுடன் நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் சுற்றுலா துறையினை மேலும் முன்னெடுக்க முடியுமென எதிர்பக்கப்படுகின்றது

இந்நிகழ்வில் புறாத்தீவு தேசிய பூங்காவின் அறங்காவலர் உபாலி குமாரதுங்க,அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச நிறுவன உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இவ்வேளை திட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.