சீமெந்தின் விலை 93 ரூபாவினால் அதிகரிப்பு...
சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மா கிலோவொன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க செரண்டிப் கோதுமை மா ஆலை நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.