Header Ads

Breaking News
recent

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிப்பு...



இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.